உழவன் அன்று பயிரை வாட விடாமல் பார்த்து கொண்டான் இன்று அவனே வாட நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.
இரவும் பகலும் பார்க்காமல் தண்ணீர் இறைத்து பயிர் விளைத்தான். இன்று இறைவனால் கூட அவனை காப்பாற்ற முடியவில்லை.
மழைக்காக கண்ணீர் சிந்த தொடங்கினான். இன்று அவன் கண்ணீர் சிந்தி சிந்தி அதுவே மழை நீராய் மாறி உள்ளது.
என்றும் கடுமையாய் நமக்காக உழைக்கும் அவன், பெற்ற கடனுக்காக கடுமையாய் அடிக்கப்படுகின்றான்.
சமுதாயத்தில் இருக்கும் சாதி மதத்தை புறக்கணித்து அனைவருக்கும் உணவு உற்பத்தி செய்தான்.
இன்று சாதி மதம் தான் அவனை சமுதாயத்திலிருந்து புறக்கணிக்கிறது.
கயவர்கள் பலர் நிலவளவு கடனை பெற்று முடக்கப்படாமல் நாட்டை
விட்டு செல்கிறனர்.உழவர் நெல்லவு கடன் பெற்று வீட்டிலே முடக்க ப்படுகிறான்.
தனம் கொடுக்கும் லக்ஷ்மியையும் போற்றுகிறோம் உயிர் பறிக்கும் யமனையும் வேண்டுகிறோம் .
நமக்கு உணவை கொடுக்கும் கடவுளான உழவனையும் போற்ற வேண்டும்.
Excellent.
ReplyDeleteSuper dear
ReplyDelete