சிரிப்பு
சிரிப்பு,எது அது?
பணக்காரனுக்கு மட்டும் சொந்தமில்லை
ஏழைக்கும் சொந்தம் தான்
பணம் இருந்தால் சிரிப்பானோ?
ஏழையாக இருந்தால் அழுவானோ?
கண்களை மறைக்கும் கூற்று
சிரிப்பிற்கும் பற்கலுக்கும் சம்மந்தமோ?
பற்கள் இல்லாதவனும் சிரிப்பான்
பற்கள் இருப்பவன் அதனை ரசிப்பான்
சத்தமில்லாமலும் சிரிப்பான்
கண்ணீர் விட்டும் சிரிப்பான்
உலகை மறந்தும் சிரிப்பான்
உலகை சுற்றி வாருங்கள்
அனைத்தையும் கண்டு மகிழவே
வெறுப்பை விட்டு வாருங்கள்
சிரிப்பின் ஒலியை கேட்கவே
மழைக்கு பின் வானவில் வரும்
துன்பத்திற்கு பின் சிரிப்பு வரும்
Superrr
ReplyDeleteThanks Akka !
Delete