உன் மடியில்
படுக்கும் போதெல்லாம் சொர்கத்தின் வாசலில் அடி வைக்கிறேன். உன் மடி தான் எனக்கு சொர்கம்
தாயே!!
உன் கைகளை என்
கன்னத்தின் மீது வைக்கும் போதெல்லம் பஞ்சை
விட மென்மையாக இருப்பது போலவே உணருகிறேன்.
நீ தாலாட்டு
பாடும் போது உன் குரல் மயிலின் இறகு போலவே மென்மையாய் இருக்கிறது. நான் உன் உயிர் ரசிகனாய்
மாறுகிறேன். உன்னை போலவே உன்னுடைய குரலும் மென்மையாகவே இருக்கிறது.
நீ என்னிடம்
பேசும்போதெல்லம் ஒரு பூ அதன் தேனினை பொழிவது போலவே இருக்கிறது. உன் வார்த்தைகள் என்றும்
எனக்கு தேனே.
நீ பேசும்போதெல்லாம்
கடல் அலைகள் வந்து என் காலைத்தொடுவது போல் குளுமையாய் இருக்கிறது.
சில நொடிகள்
தேனை விட இனிமையாய் இருக்கிறது உன் பேச்சும் உன் சொற்களும்.
ஆனால் நீ என்
மேல் கோபித்து என்னிடம் பேசாமல் மௌனமாய் ஒரு நொடி இருந்தாலும் கூட பல இடிகள் ஒன்றாய்
சேர்ந்து இடிப்பது போலவே இருக்கிறது.
நான் கண்ணீர்
சிந்தும் போதெல்லம் அதனைவிட அதிகமாய் நீ கண்ணீர் சிந்துகிறாய். நீ கண்ணீர் சிந்தும்போதெல்லம்
நீ ரத்தம் சிந்துவதை போலவே உணருகிறேன். அன்பிற்கே அடையாளமாய் இருக்கின்றாய்.
மலரின் இதழ்கள்
கூட தேனின்றி இருக்கும் ஆனால் உன் கண்களில் அன்பின்றி நான் ஒருபொழுதும் பார்ததில்லை.
உன் பாசத்திலும்
அன்பிலும் மூழ்கி மூச்சு காற்றுக்காக ஏங்குகிறேன்.
விதைக்கு தண்ணீர்
ஊற்றி அழகிய பூவாய் மாற்றுவது போல எனக்கு நீ உன் அன்பை ஊற்றி அழகிய மனிதனாய் உருவாக்கியுள்ளாய்.
என் வாழ்க்கையில்
பூத்த முதல் பூவும் நீ தான் என் வாழ்க்கையில் என்றும் வாடாத பூவும் நீ தான்.
உன் இதயம் என்னும்
சிறையில் நான் என்றும் கைதியாய் இருப்பேனே.
Nice ��
ReplyDeleteSemma kavidhai Amma😍
ReplyDeletesuper di
ReplyDeleteNice machi��
ReplyDeleteThank you everyone !
ReplyDeleteUltimate bro. Keep up the good work
ReplyDeleteNice kavithai. Keep writing.
ReplyDelete